சூப்பர் ஸ்டார் படத்தில் நடிகர் கமலா? மீண்டும் இணையும் இரு சிகரங்கள்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்தில் கமலஹாசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
By : Karthiga
தமிழ் திரையுலகில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கென்று ஒரு பாணியையும் வெற்றிப்பாதையும் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலிக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டாரின் 171 வது படமான இது எல்.சி.யு.வில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் கடைசி நிமிட காட்சிகளில் கமலின் கம்பீரக் குரல் ஒலித்து லியோ எல்.சி.யுவில் இணைந்துள்ளதை உறுதி செய்தது. அதேபோல சூப்பர் ஸ்டாரின் 171 வது படத்தில் கடைசி 7 நிமிடத்தில் கமலஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் உண்மைதானா என விரைவிலேயே உறுதி செய்யப்படும். ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பிலும் மகிழ்ச்சியிலும் இருக்கின்றனர். இருபெரும் சிகரங்கள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைவதை மிகுந்த மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறதா? இல்லையா? என்பது கூடிய விரைவிலேயே தெரிந்துவிடும்.