Begin typing your search above and press return to search.
யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்.. கமல்ஹாசன் பேட்டி.!
சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், ரவிபச்சமுத்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் பேசும்போது, எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன்தான்.

By : Thangavelu

மேலும், எங்கள் கூட்டணி தமிழகத்திற்கு விடிவெள்ளியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியடையும்.
இதே போன்று நடிகர் கமல்ஹாசன் பேசும் போது, எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைத்து செல்வோம். தமிழகத்தில் அதிமுக, திமுகவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. மேலும், ஸ்டாலினையும் விமர்சனம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story