பிரபல நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரபல நடிகரும் மனித உரிமைகள் காக்கும் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கார்த்திக் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரும் மனித உரிமைகள் காக்கும் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதன் பின்னர் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் தொடங்குவேன் என அறிவித்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கும் ஆதரவாகவும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வேன் என கூறினார். இவரது பேட்டிக்கு குஷ்பு வரவேற்பும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நேற்று முதல் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார் கார்த்திக். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், கார்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று ரிப்போர்ட் வந்துள்ளது. இருப்பினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனால் சில தினங்கள் அவர் பிரச்சாரம் செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிமுக கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.