நடிகர் மாதவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.!
ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
By : Thangavelu
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொற்று அதிகரித்ததை போன்று மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அதிலும் மும்பை நகரில் வசிக்கும் சினிமா பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி மாதவன் தனது ட்வீட்டர் பதிவு மூலம் உறுதிபடுத்தியுள்ளார். தன்னுடைய உடல்நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று, ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.