Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட கதாநாயகனாக உருவெடுத்த பாகுபலி பிரபாஸ்!

Prabhas next projects.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட கதாநாயகனாக உருவெடுத்த பாகுபலி பிரபாஸ்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 Aug 2021 12:15 PM IST

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் பிரபாஸ்.




பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். தற்பொழுது அவர் கைவசம் உள்ள ராதே ஷியாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடவுள்ளனர். இதில் 'ராதே ஸ்யாம்' முற்றிலுமாக முடிந்து வெயியீட்டுக்கு தயாராக உள்ளது. வரும் 2022'ல் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.




இதுபோல் சலார் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. இதில் சுருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு படைப்பாக ஆதிபுருஷ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமனாகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கிரித்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். இந்த படங்களை முடித்து விட்டு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இதில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கின்றனர். இவ்வாறாக தென்னிந்தியாவின் பிரம்மாண்ட ககதாநாயகனாக பிரபாஸ் உருவெடுத்துள்ளார்.

Image source : Pinterest

Next Story
கதிர் தொகுப்பு
Trending News