Kathir News
Begin typing your search above and press return to search.

தாதாசாகேப் பால்கே விருது.. நடிகர் ரஜினிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.!

51வது தாதாசகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது

தாதாசாகேப் பால்கே விருது.. நடிகர் ரஜினிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 April 2021 12:01 PM IST

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது 51வது தாதாசகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியுள்ளது.





இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News