மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திக்கிறார்.!
மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் சந்தித்து பேசுகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதலே அரசியலில் ஈடுபடுவதாக நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை அவர் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் சந்தித்து பேசுகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதலே அரசியலில் ஈடுபடுவதாக நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை அவர் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார்.
இதனிடையே ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அடிக்கடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இதனிடையே புதிய படங்களில் நடிப்பதிலும் மிகவும் பிஷியாக இருந்தார். அப்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் முன்கூட்டியே தொடங்கி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். அவருடன் ஒன்றாக நடித்த ரஜினிகாந்த் மட்டும் கட்சி தொடங்குவதில் காலதாமதம் ஆனது.
இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் கட்சி தொடங்குவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் அவரது உடல்நிலை மற்றும் கொரோனா காரணமாக கட்சி தற்போது தொடங்கப்படாது என அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசுகின்றார். இதற்கான அறிவிப்புகளை அவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அழைப்புகளை விடுத்தார். இந்த சந்திப்பு இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
மீண்டும் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் தனது மன்ற செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. வரப்போகின்ற உள்ளாட்சி தேர்தலில் எதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா அல்லது தனித்து நிற்பதற்கு ஆலோசிக்கின்றாரா என கூட்டம் முடிந்த பின்னர்தான் தெரியவரும்.