Kathir News
Begin typing your search above and press return to search.

'என்னை திருமணம் செய்து கொள்வீர்களா' என்று கேட்ட ஒரு பெண்ணிற்கு சல்மான் கான் தந்த பதில்!

நடிகர் சல்மான்கானிடம் திருமணத்தைப் பற்றிய கேள்வியை பேட்டி ஒன்றில் நிருபர் கேட்டதற்கு அவர் தந்த பதில்.

என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட ஒரு பெண்ணிற்கு சல்மான் கான் தந்த பதில்!
X

KarthigaBy : Karthiga

  |  29 May 2023 9:15 PM IST

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் , சங்கீதா பிஸ்லானி, கத்ரீனா கைஃப், சோமி அலி என்று பல நடிகைகளுடன் அவர் காதலில் இருந்து பிறகு முறிவு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிகழ்ச்சியில் துபாயில் பட விழா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற சல்மான்கானிடம் ஒரு பெண்" உங்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது என்னை மணந்து கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பினார் .


அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்" என்றார். இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சல்மான் கான் அளித்த பேட்டி ஒன்றில் "என் முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. தவறு என்னுடையதுதான் . என்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம் எனது காதல் கதைகள் என்னோடு சமாதியாகிவிடும்" என்று தெரிவித்து இருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News