நடிகர் சந்தானத்தின் உறவுப்பெண் கொலையில் குற்றவாளி கைது.!
இதில் விசாரணை நடத்திய போலீசார் ஜெயபாரதியை கொலைதான் செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர், வாகன ஓட்டுனர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
By : Thangavelu
நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் சரக்கு வாகன ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உடைந்தையாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி திருவாரூரை அடுத்துள்ள தப்பளாம்புலியூரில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிந்த ஜெயபாரதி என்ற இளம்பெண் ஒருவர் சரக்கு வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் முதலில் விபத்து என்று பதிவு செய்தனர். இதனிடையே அது கொலை என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால்தான், கூலிப்படையை ஏவி ஜெயபாரதியை கொலை செய்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் புகார் மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் சேர்ந்து காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதில் விசாரணை நடத்திய போலீசார் ஜெயபாரதியை கொலைதான் செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர், வாகன ஓட்டுனர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை செய்வதற்கு காரணமாக இருந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷின் மைத்துனர் செந்தில்குமார் கொரோனா சிகிச்சையில் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.
இதனிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய செந்தில்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புவதற்கு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.