சத்குருவின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.. நடிகர் சந்தானம்.!
தமிழகத்தில் உள்ள கோயில்களை மீண்டும் பக்தர்களிடம் தமிழக அரசு ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்தார்.
By : Thangavelu
தமிழகத்தில் உள்ள கோயில்களை மீண்டும் பக்தர்களிடம் தமிழக அரசு ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்தார்.
அதாவது தமிழகத்தில் பூஜை செய்யாமலே கிட்டத்தட்ட 11,999 கோயில்கள் உள்ளது. அதில் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன.
மேலும், 34,000 கோயில்களில் 10,000க்கும் குறைவான வருவாயுடன் போராடி வருகிறது. எனவே தற்போதைய சூழலில் மீண்டும் பக்தர்களிடமே ஒப்படைத்து விடுங்கள் என்று உருக்கமான வீடியோ மற்றும் பதிவை சத்குரு வெளியிட்டிருந்தார்.
அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சத்குரு கருத்துக்கு நான் உடன்படுகிறேன் என்று நடிகர் சந்தானம் தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 'பல கோயில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. அங்கு போதுமான அளவு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்யப்படவில்லை. கோவில்களை பக்தர்களிடமே கொடுத்துவிடுங்கள்' என சந்தானம் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த கருத்துக்கள் பலரும் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்துக்கள் கோயில்களை மீண்டும் இந்துக்களிடமே ஒப்படைப்பது சத்குருவின் கருத்து சிறந்த உதாரணமாகவும் உள்ளது.