Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் செந்தில் உட்பட குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதி.!

நடிகர் செந்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் செந்தில் உட்பட குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று உறுதி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2021 10:37 AM IST

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதுவும் தேர்தல் பரப்புரைக்கு பின்னர்தான் அதிகளவு தொற்று பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்றாக கூடியிருந்தனர்.

அதே போன்று நடிகர் செந்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் செந்தில் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News