ஈஸ்வரன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிம்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஈஸ்வரன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிம்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இவர் உடல் எடையை குறைத்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் அதற்கான பணிகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'ஈஸ்வரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அடுத்த மாஸ் அறிவிப்பை சிம்பு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'ஈஸ்வரன்' படத்தின் சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த மாஸ் அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பதும் இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.