Kathir News
Begin typing your search above and press return to search.

பரதம் கற்றுக் கொள்ளும் நடிகர் சிம்பு - புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவல்.!

பரதம் கற்றுக் கொள்ளும் நடிகர் சிம்பு - புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவல்.!

பரதம் கற்றுக் கொள்ளும் நடிகர் சிம்பு - புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவல்.!
X

Amritha AmrithaBy : Amritha Amritha

  |  5 Nov 2020 5:24 PM GMT

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே தற்போது வரை நடித்து வருபவர் நடிகர் சிம்பு. முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர். தமிழில் சில வருடங்களுக்கு பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார் ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது.

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு 101 கிலோவிலிருந்து 70 கிலோவாக உடல் எடையை குறைத்திருக்கிறார். மேலும் இதற்காக அவர் உடற்பயிற்சி,விளையாட்டு, நீச்சல், கூடைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றை செய்துள்ளார். இந்நிலையில் சிம்பு பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சரண்யா பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார். இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பரவி வருகிறது.

இதை பார்த்து நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் அவரது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News