மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.. நடிகர் சூர்யா ட்விட்டரில் தகவல்.!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
By : Thangavelu
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூர்யாவின் சூரரை போற்று படம், ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்த படம் நல்ல கதையம்சத்துடன் உள்ளது என திரைவிமர்சனங்கள் வந்தது.
இதனிடையே சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கொரோனா பரவல் காரணமாக அடுத்த படத்தில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் ரசிகர்கள் சோர்வடைந்திருந்தனர்.
இந்நிலையில், தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், சூர்யா 40 படத்தில் கலந்து கொண்டது மட்டுமின்றி அப்படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.