Kathir News
Begin typing your search above and press return to search.

வரி ஏய்ப்பு செய்தது தேசத்துரோகம்.. நடிகர் விஜய்க்கு குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.!

ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக உரிய சமயத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்கக் கூடிய ஒரு நன்கொடை இல்லை என்று மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு செய்தது தேசத்துரோகம்.. நடிகர் விஜய்க்கு குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 July 2021 9:24 AM GMT

பிரபல நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு உரிய முறையில் நுழைவு வரி செலுத்தாத காரணத்தினால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. இதனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

செலுத்த மறுத்த விஜய், வரி விதிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கின்றார் என்பதனை மனுவில் குறிப்பிடவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான், மனுதாரர் நடிகர் என்பதனை குறிப்பிட்டார்.

ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக உரிய சமயத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்கக் கூடிய ஒரு நன்கொடை இல்லை என்று மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மக்கள் செலுத்தும் வரிதான் பள்ளிகள், மருத்துவனைகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது எனவும், தமிழகத்தில் நடிகர்கள், நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, திரையில் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரியைப் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். வரி ஏய்ப்பு செய்வது தேசத் துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டர். அதோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையும் விதித்து அதனை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டார்.

ஒரு உச்ச நடிகர் இப்படி வரிஏய்ப்பு செய்வது மிகப்பெரிய குற்றமாகும். சமூதாயத்தில் திரைப்படங்கள் மூலமாக நாட்டிற்கு நல்ல கருத்துக்களை விதைக்கும் நடிகரே வரி ஏய்ப்பு செய்யலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News