தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. இதில் பல பிரபலங்கள் வாக்களிக்கும்போது சர்ச்சைகள் எழுந்தது. அந்த வகையில் நடிகர் விஜய் சென்னையில் சைக்கிளில் சென்று தனது வாக்கை செலுத்தினார். அவரது சைக்களில் வருகை பற்றி திமுக உள்ளிட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்ற சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனால் விஜய் பிஆர்ஓ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அருகாமையில் இருப்பதால் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என கூறப்பட்டது. இந்த சர்ச்சை முடிந்த நிலையில், நடிகர் அஜித் கருப்பு, சிவப்பு கலர் மாஸ்க் அணிந்திருந்தார். அதுவும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த கையோடு நடிகர் விஜய் தனது 65வது படத்திற்காக ஆயத்தமாகி உள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
இதனிடையே சட்டமன்ற தேர்தல் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்த நிலையில், ஓட்டு போட்ட கையுடன் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அவர் சென்னை விமான நிலையம் சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.