ஜார்ஜியா சென்ற நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.!
‘விஜய் 65’ படக்குழுவினர், ஜார்ஜியாவில் அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By : Thangavelu
'விஜய் 65' படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் ஜார்ஜியா சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான பூஜை கடந்த வாரம் போடப்பட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்களித்த விஜய் அன்றைய இரவு ஜார்ஜியா புறப்பட்டு சென்றார்.
அங்கு 16 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஏற்கெனவே 'விஜய் 65' படக்குழுவினர், ஜார்ஜியாவில் அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் விரைவில் ஜார்ஜியா செல்ல உள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் ஜார்ஜியா விமான நிலையம் சென்றடைந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் விஜய்க்கு ரசிகர்கள் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றுள்ளனர். இந்த படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.