நடிகர் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' பாடல் வெளியீடு.!
தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் தயாரிக்கும் 2வது படமான ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடலை 7ம் தேதி வெளியிடுகிறோம்.
By : Thangavelu
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்தின் முதல் பாடகி தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தினை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக படத்தை வெளியிடாமல் இருந்து வருகிறது படக்குழு.
இந்நிலையில், தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாங்கள் தயாரிக்கும் 2வது படமான 'மாமனிதன்' படத்தின் முதல் பாடலை 7ம் தேதி வெளியிடுகிறோம். அப்பாவிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஒரு இசை விருந்து காத்திருக்கிறது என்று பெருமையுடன் கடந்தவாரம் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தற்போது 'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை யுவன் ஷங்கர்ராஜா உடன் இசைஞானி இளையராஜா பாடும் 'தட்டிப்புட்டா' பாடல் மெலடி ரகமாக உள்ளது. இப்பாடலை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். படத்தின் கதையம்சம் எப்படி இருக்கும் என்று நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.