நடிகர் விக்ரம் வீட்டில் சோதனை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்..!
நடிகர் விக்ரம் வீட்டில் சோதனை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்..!
By : Amritha J
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விக்ரம். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் இவருடன் இவரது மகன் த்ருவ் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் தற்போது விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலையடுத்து, அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பல்வேறு நடவடிக்கைகளும் இவ்வாறு தவறாக கூறியது யார் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதைப்போல் விஜய், அஜித் ஆகியோரின் வீட்டிற்கும் சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சில முன்னணி நடிகர்களுக்கு இதுபோல் மர்ம நபர்களால் குற்றச்சாட்டு எழுந்து வண்ணமாக தான் இருக்கின்றது.