Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விமல் மனைவி தேர்தலில் போட்டி.. எந்த கட்சியில் தெரியுமா?

நடிகர் விமல் களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் கதை முழுக்க கிராமத்தின் மையமாக கொண்டு எடுக்கப்பட்டது ஆகும்.

நடிகர் விமல் மனைவி தேர்தலில் போட்டி.. எந்த கட்சியில் தெரியுமா?

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2021 2:50 AM GMT

நடிகர் விமல் களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் கதை முழுக்க கிராமத்தின் மையமாக கொண்டு எடுக்கப்பட்டது ஆகும்.

இதனால் அடுத்தடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவருக்கு கிராமத்து கதைகள் செட் ஆகிறது என்று நிறைய டைரக்டர்கள் அவருக்கு வாய்ப்பும் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விமலின் மனைவியை திமுக சார்பில் களம் இறக்க முடிவு செய்துள்ளார். இதற்கான தொகுதியையும் தேர்வு செய்து வைத்துள்ளார்.




திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை தொகுதிதானாம். இந்த தொகுதியில் மனைவியை போட்டியிட வைத்து வெற்றி பெறுவதற்கான முயற்சியில் தற்போது விமல் களம் இறங்கியுள்ளாராம்.

திமுக எம்.எல்.ஏ., கே.என்.நேருவுடன் நெருக்கமாக இருக்கிறார். விமல் தம்பதிக்கு குழந்தை பிறந்தபோது நேரில் சென்று நேரு வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.




அதே போன்று மற்றொரு திமுக விஐபியான அன்பில் பொய்யாமொழியை சந்தித்தும் தனது மனைவிக்கு சீட் வாங்கிதருமாறு கோரிக்கை வைத்துள்ளாராம்.

இதனால் வருகின்ற தேர்தலில் விமல் மனைவி மணப்பாறை தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது நிராகரிக்கப்படுவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவரை போன்று இன்னும் எத்தனை சிறிய நடிகர்கள் தேர்தலில் நிற்கிறேன் என்று சொல்வார்களா என தெரியவில்லை. ஒரு படத்தில் நடித்துவிட்டு உடனடியாக நானும் எம்.எல்.ஏ., ஆகனும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இது போன்றவர்களை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News