மனிதர்களை பார்த்தாலே பயம்.. நடிகர் விஷ்ணு விஷால் அதிர்ச்சி தகவல்.!
நடிகர் விஷ்னு விஷால் நடிப்பில் ‘காடன்’ திரைப்படம் மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படம் வருகின்ற மார்ச் 26ம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் விஷ்னு விஷால் நடிப்பில் 'காடன்' திரைப்படம் மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படம் வருகின்ற மார்ச் 26ம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ''யானைகளைப் பார்த்து சின்ன வயதில் நான் அதிகமாக பயந்தேன். படத்தில் நடிக்கும்போது முதல் முறை பாக்கும் போது பயம் இருந்தது.தற்போது வாழ்க்கையில் நடக்கிறத பார்க்கும்போது, மனிதர்களைப் பார்த்துதான் நான் பயப்படனும் என்று புரிந்துகொண்டேன்.
விலங்குகள் கூட பாசமாகத்தான் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை. யானைக்கு நினைவாற்றல் அதிகம். நான் படம் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது ஆனால் தற்போது போனால் கூட அந்த யானை பாசமாக பழகுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எப்போதுமே மனிதர்களை விட விலங்குகளே உற்ற நண்பனாகவும் இருக்கிறது பல பேர் வாழ்க்கையிலும். நடிகர் விஷ்ணு விஷால் சொல்வது உண்மைதான் போல தெரிகிறது.