நடிகர் விவேக் மறைவுக்கு தருமபுரியில் பொதுமக்கள் அஞ்சலி.!
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பொதுமக்கள் நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
By : Thangavelu
நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பொதுமக்கள் நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம், இண்டூர் பேருந்து நிலையத்தில் நடிகர் விவேக் பேனர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
அதே போன்று பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து, மூன்று ரோடு பகுதியில் நடிகர் விவேக் படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சாலையில் சென்றவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.