Top
Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் விவேக் காலமானார்.. சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!

நடிகர் விவேக் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 1961ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1986 முதல் 1992 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றியுள்ளார்.

நடிகர் விவேக் காலமானார்.. சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!

ThangaveluBy : Thangavelu

  |  17 April 2021 2:33 AM GMT

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் 59, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று காலமானார்.

மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு முதற்கட்டமாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். நடிகர் விவேக் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 1961ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1986 முதல் 1992 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றியுள்ளார்.

முதன் முதலில் கே.பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசு மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி மற்றும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Next Story