நடிகர் விவேக் மறைவால் வேதனையடைந்தேன்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு திரையுலகிற்கு ரசிகர்களுக்கு பேரிழப்பு. எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.

நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.
இந்நிலையில், நடிகர் விவேக் மறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவால் வேதனை அடைந்தேன். 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு திரையுலகிற்கு ரசிகர்களுக்கு பேரிழப்பு. எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. கலை சேவையாலும், சமூக சேவை ஆளும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக். நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.