நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.!
நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
By : Thangavelu
நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சினிமாத்துறையினர் மற்றும் பொதுமக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து போலீசார் அணிவகுப்புடன் விவேக்கின் உடல் விருகம்பாக்கம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரைத்துறையினர் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். துப்பாக்கி குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் அடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.