Begin typing your search above and press return to search.
78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம்.!
72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்கு பின்னர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
By : Thangavelu
சின்னகலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே நடிகர் விவேக் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி நடிகர் விவேக் இல்லம் அமைந்திருந்த விருகம்பாக்கத்தில் இருந்து மயானம் வரைக்கும் போலீசார் மற்றும் திரைத்துறையினர் ஊர்வலமாக அவரது உடலை எடுத்துச்சென்றனர். இதன் பின்னர் மின்யாமனத்தில் தகனத்திற்கு முன்பாக இறுதி காரியங்களை விவேக் மகள் தேஜஸ்வினி நிறைவேற்றினார்.
இதன் பின்னர் 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்கு பின்னர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Next Story