அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக்.!
தடுப்பூசி பற்றி எந்தவிதமான அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் கொரோனா வரும்.
By : Thangavelu
நடிகர் விவேக் இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
சமீபகாலமாக தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையிலான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பற்றி எந்தவிதமான அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் கொரோனா வரும்.
ஆனால் உயிரிழப்பு போன்ற எந்த ஒரு பெரிய அளவிலான பாதிப்புகள் வராது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கட்டாயம் முககவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் என கூறினார்.