தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவேக் மனைவி.!
எனது கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றும் மறக்க மாட்டோம்.

காமெடி நடிகர் விவேக் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் உரிய அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி விருகம்பாக்கத்தில் இருந்து மின்மயானம் அமைந்துள்ள பகுதி வரை போலீசார் விவேக் உடலுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சென்றனர். தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக 78 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை அளித்ததற்கு கோடிக்கணக்கான நடிகர் விவேக் ரசிகர்கள் தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையில் விவேக் மனைவி அருள்செல்வி தனது மகள்களுடன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, எனது கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றும் மறக்க மாட்டோம். நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். நீங்கள் கொடுத்தது மிகப்பெரிய கௌரவம்.
மேலும், காவல்துறையினர்களுக்கும் நன்றி எனக்கூறினார். அது மட்டுமின்றி உலகம் எங்கும் இருக்கும் எனது கணவரின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டு, பேட்டியை முடித்துக்கொண்டார்.