தடுப்பூசி போட்டுக்கோங்க.. பாதுகாப்பாக இருங்க.. நடிகர் யோகி பாபு பொதுமக்களுக்கு வேண்டுகோள்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தது. அதன்படி தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போன்று அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வரும் யோகிபாபு தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.