Kathir News
Begin typing your search above and press return to search.

பேரறிவாளனை விடுதலை செய்ய நடிகர்கள் கூட்டாக கோரிக்கை.!

பேரறிவாளனை விடுதலை செய்ய நடிகர்கள் கூட்டாக கோரிக்கை.!

பேரறிவாளனை விடுதலை செய்ய நடிகர்கள் கூட்டாக கோரிக்கை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Nov 2020 7:13 PM IST

சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய தானும் ஆதரவுக்கரம் நீட்டுவதாக நடிகர் பாத்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் இருந்து வருகிறார்.


கடந்த 2 வருடங்களாக அமைதி காத்துவரும் ஆளுநருக்கு 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் அதிக முறை கோரிக்கை வைத்தும் ஆளுநர் இதுவரை எந்¬ நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.


இதனையடுத்து இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ் சினிமாத்துறையைச் சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து, 161 ரிலீஸ் பேரறிவாளன் பெயரில் பாடலை தயாரித்து நவம்பர் 19ம் தேதி வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில், பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


அதே போன்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காவல் அதிகாரியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தீர்ப்புக்குப் பின்னும் மறு விசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News