Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை சித்ரா தற்கொலை.. தொடர் விசாரணைக்கு பின் கணவனை தூக்கிய போலீஸ்.!

நடிகை சித்ரா தற்கொலை.. தொடர் விசாரணைக்கு பின் கணவனை தூக்கிய போலீஸ்.!

நடிகை சித்ரா தற்கொலை.. தொடர் விசாரணைக்கு பின் கணவனை தூக்கிய போலீஸ்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Dec 2020 6:43 AM GMT

சீரியல் நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி சின்னத்திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

இதனையடுத்து கணவர் ஹேம்நாத் மேல் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்ராவின் மரணம் தொடர்பாக இரண்டு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். இதன் பின்னர் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News