Begin typing your search above and press return to search.
10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஷால் படத்தில் இணைந்த நடிகை!
10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஷால் படத்தில் இணைந்த நடிகை!
By : Amritha J
நடிகர் விஷால் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அந்தவகையில் தற்போது 'எனிமி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் எனிமி படத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் நடித்த விஷால் பட நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஷால் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'சிவப்பதிகாரம்'.
கரு பழனியப்பன் இயக்கிய இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தார். அருண் விஜயின் "தடையறத்தாக்க" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும், தளபதி நடித்த வில்லு படத்தில் இடம்பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லை உள்பட பல பாடல்களைப் பாடியுள்ளார். இந்நிலையில் தற்போது விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மம்தா மோகன் தாஸ் நடிக்க உள்ளார்.
இவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடிக்கிறார் என்று செய்தி வெளியானது. பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது விஷால் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Next Story