Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திரா காந்தி வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத்- 'எமர்ஜென்சி'

தமிழில் தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது எமர்ஜென்சி என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்திரா காந்தி வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத்- எமர்ஜென்சி

KarthigaBy : Karthiga

  |  20 May 2023 9:45 AM GMT

இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த நெருக்கடி நிலை பிரகடனத்தில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து 'எமர்ஜென்சி' என்ற படம் தயாராகிறது. கங்கனா ரணாவத் இந்த படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார். அவரது இந்திரா காந்தி தோற்ற புகைப்படம் தற்போது வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.


இந்திரா காந்தியின் 'எமர்ஜென்சி' படம் விரைவில் திரைக்கு வரும் என்று கங்கனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'எமர்ஜென்சி படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டது . இந்த படத்துக்கு இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்போம். எமர்ஜென்சி படத்தை முதலில் பார்த்த திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் பலமுறை கண்கலங்கினார். உன்னை பார்த்தால் பெருமையாக இருக்கிறது என்றும் பாராட்டினார் ' என்றார் .


எமர்ஜென்சி படத்தை கங்கனா ராணாவத்தே இயக்கி தயாரிக்கிறார். சொத்துக்களை அடமானம் வைத்து இந்த படத்தை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் சிரேயஸ் தல்பட்டும், ஜெயப்ரகாஷ் நாராயணன் கதாபாத்திரத்தில் அனுபம் கேரும் நடித்துள்ளனர். படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான சர்ச்சை காட்சிகள் இருக்கலாம் என்று கூறி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து படத்திறகு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News