மகாராஷ்டிரா முதலமைச்சரால் எனது உயிருக்கு ஆபத்து.. உச்சநீதிமன்றத்தில் நடிகை கங்கனா முறையீடு.!
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மகாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா உச்சநீதிமன்றத்தில் திடீரென்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மகாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா உச்சநீதிமன்றத்தில் திடீரென்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார். இதனிடையே மும்பை உயர் நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தேல் ஆகியோர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: எங்கள் மீது பல அவதூறு வழக்குகள் மும்மை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுவரை சட்டத்திற்கு உட்பட்டு ஆஜராகி வந்தோம். ஆனால் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் சிவசேனா தொடர்ந்து தங்களை அச்சுறுத்தி வருகிறார்.
முன் அனுமதியின்றி எங்கள் வீட்டின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக இடித்தனர். ஆனால் அது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் மகாராஷ்டிரா அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்கள் மீதான வழக்குகளை சிம்லாவில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பெண்ணுக்கே காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இது போன்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.