மகளை கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பூ! வைரல் ட்வீட்!
மகளை கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பூ! வைரல் ட்வீட்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படங்களும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.தமிழ், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் கலக்கிய இன்றும் தொடர்ந்து திரைப்படம், சின்னத்திரை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிஸியாக இருப்பவர்.மேலும் அரசியலிலும் பிரமுகராக வலம் வருபவர்.
இந்நிலையில் சுந்தர்.சி-குஷ்பு தம்பதியின் 2 மகள்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது சர்ச்சை கருத்துகள் எழுந்த வண்ணம்தான் இருக்கின்றன. காரணம் நடிகை குஷ்புவை போல இல்லாமல் இவரது இரு மகள்களும் மிகக் குண்டாக இருக்கின்றனர் எனச் சில ரசிகர்களே கிண்டலடித்து வந்தனர். எனவே நடிகை குஷ்பு தற்போது அவரது இரண்டாவது மகள் அனந்திதாவின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு அனந்திதாவின் பிறந்தநாளில், “ஒரு அளவுக்கடந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறாய்.
உன்னால் ஒவ்வொரு கணத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. ஐ லவ் யூ என் பொம்மை குட்டி எனப் பதிவிட்டு, அதில் சில புகைப்படங்களை இணைத்து உள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மகள் மிக ஒல்லியாக காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும் இந்த ட்விட்டை வைரலாக்கி வருகின்றனர்.
My bundle of happiness and energy. Just the same as what your name #Anandita means. You bring only joy at every moment , right from the time you walked into our lives. Mmmmuuuaaahhh I love you my bommai kutti #HappyBirthdayAnandita ❤❤❤💝💝💝🎂🎂🎂🎂😘😘😘😘😘😘😘 pic.twitter.com/iKVPdoDKL7
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 24, 2021