Kathir News
Begin typing your search above and press return to search.

போலீசாருக்கு சவால் விட்ட மீரா மிதுன் கைது !

பட்டியலினத்தவர் குறித்து அவதூறான வகையில் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாருக்கு சவால் விட்ட மீரா மிதுன் கைது !

ThangaveluBy : Thangavelu

  |  14 Aug 2021 11:26 AM GMT

பட்டியலினத்தவர் குறித்து அவதூறான வகையில் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் நடிகை மீரா மிதுன். இந்த வீடியோ வெளியிட்ட பின்னர் பட்டிலினத்தவர்களிடம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வன்னியரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுனையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகாமல் போலீசாருக்கு எதிராக வீடியோ வெளியிட்டிருந்தார். தன்னை யாரும் கைது செய்ய முடியாது என பேசியிருந்தார். இந்நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை கைது செய்தது. இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Topnews

Image Courtesy: Toptamilnews

https://www.toptamilnews.com/actress-meera-mithun-arrested-by-cyber-crime-police/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News