Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார் !

பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு 56 வயதாகிறது.

நடிகை  சித்ரா மாரடைப்பால் காலமானார் !

ThangaveluBy : Thangavelu

  |  21 Aug 2021 6:06 AM GMT

பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு 56 வயதாகிறது.

இவர் சென்னை, சாலிகிராமத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இவர் இயக்குநர் கே.பாலசந்தரால் 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேலும், நடிகர் ரஜினியுடன் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்ளிட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து மிகவும் பிரபலமானதால் 'நல்லெண்ணெய் சித்ரா' என்று அழைக்கப்பட்டு வந்தார். சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் இந்த வருடம் 12ம் வகுப்பு முடித்துள்ளார். தற்போது சித்ராவின் உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy:Malaioli.com

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/08/21085440/2941951/Tamil-News-Actress-Nallennai-Chithra-passes-away.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News