எனது கணவர் துன்புறுத்துகிறார்.. எஸ்.ஐ. மீது நடிகை ராதா புகார்.!
நடிகை ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வசந்தராஜா சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகின்றார்.

நடிகர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராதா. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், நடிகை ராதா சென்னை, தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வரும் ராதாவிற்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள வசந்தராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் எண்ணூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். வசந்தராஜாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வசந்தராஜா சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகின்றார்.திருமணத்திற்கு பின்னரும் பழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று ராதாவை தினமும் வசந்தராஜா துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கணவர் வசந்தராஜா தன்னை துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.