முகம் வீங்கிப்போச்சி.. ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ரைசா.!
சினிமா நடிகையும், மாடல் அகழகியுமான ரைசா சினிமா படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகின்றார்.

தவறான சிகிச்சையால் முகம் வீங்கிப்போச்சி என்று நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா நடிகையும், மாடல் அகழகியுமான ரைசா சினிமா படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகின்றார். இதனிடையே காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனால் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராக ரைசா ஈடுபட்டு வருபவர்.
இதற்காக தோல் மருத்துவர் பைரவியிடம் சில சிகிச்சைகள் எடுத்தாக கூறப்படுகிறது. இதன் பின்னர் ரைசாவின் முகம் வீங்கி போனது. இதனையடுத்து அவர் மருத்துவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்தார். அதில் தனக்கு தவறான சிகிச்சை அளித்ததால், என்னுடைய முகமே மாறிப்போச்சி என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்துள்ளதாக கூறி மருத்துவர் பைரவி செந்திலிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நடிகை ரைசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.