முதல்வர் பிறந்தநாளில் நடிகை ரோஜா செய்த செயல் - குவியும் பாராட்டுக்கள்!
முதல்வர் பிறந்தநாளில் நடிகை ரோஜா செய்த செயல் - குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமாவில் 90-களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரோஜா. முன்னணி நடிகர்களுடன் நடித்து பல விருதுகளையும் வென்றவர். தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ-வும் நடிகையுமான ரோஜா செய்த நெகிழ்ச்சியான செயலுக்கும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி பெற்றோர் இல்லாமல் அரசு பெண்கள் காப்பகத்தில் வசித்துவரும் புஷ்பகுமாரி என்ற மாணவியை நடிகை ரோஜா தத்தெடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கல்வி செலவை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.பெற்றோர் இல்லாமல் பெண்கள் காப்பகத்தில் தங்கி இருக்கும் மாணவிக்கு ரோஜா செய்த இந்த நெகிழ்ச்சியான செய்தி அவரது ரசிகர்களாலும், நெட்டிசன்களாலும் பாராட்டப்பட்டு வருகின்றன.