நடிகை ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது.!
நடிகை ஷனம் ஷெட்டிக்கு சமூக வலைதளம் மூலமாக ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
By : Thangavelu
நடிகை ஷனம் ஷெட்டிக்கு சமூக வலைதளம் மூலமாக ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கூடுதலாக பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவராக ஷனம் ஷெட்டி உள்ளார். அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம். இதனால் இவரை பின்தொடர்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இந்நிலையில், இவரது வாட்ஸ்அப் மற்றும் இன்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தினமும் ஆபாச மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் உள்ள அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்தார்.
இது பற்றிய ஆவணங்களை போலீசாரிடம் வழங்கினார் ஷனம் ஷெட்டி. இதனை பெற்றுக்கொண்ட அடையாறு சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான் பால் 21, என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நடிகைக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பிய சம்பவம் திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.