Kathir News
Begin typing your search above and press return to search.

மரண பயத்தில் இருந்த தமன்னா - ஏன்?

மரண பயத்தில் இருந்த தமன்னா - ஏன்?

மரண பயத்தில் இருந்த தமன்னா - ஏன்?
X

Amritha JBy : Amritha J

  |  12 Nov 2020 11:05 PM IST

கொரோனா காரணமாக சாதாரண மக்கள், முதல் திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் பாதித்தனர். அந்தவகையில் நடிகை தமன்னா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் கொரோனா எனக்கு மரண பயத்தை காட்டி விட்டதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமன்னா அதிலிருந்து குணமான பின் தற்போது "11th ஹவர்" என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார்.இந்த வெப்தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா கொரோனாவின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் கூறியது:கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது எனக்கு மரண பயம் இருந்துகொண்டே இருந்தது. என்னை போலவே அறிகுறிகள் இருந்த ஒரு சிலர் சிகிச்சையின் போதே உயிர் இழந்ததை நினைத்து நான் மிகவும் பயந்துவிட்டேன்.

ஆனால் நல்ல வேளை மருத்துவர்கள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.எனது பெற்றோர்கள் பக்கபலமாக இருந்ததால் நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பதை அந்த நேரத்தில் நான் புரிந்து கொண்டேன் என்றும் கூறினார்.

அதன்படி சிகிச்சையின்போது அதிக மருந்துகளை உட்கொள்வதால் உடல் எடை அதிகரித்தது என்றும், குண்டாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் நான் பகிர்ந்த போது பொதுமக்கள் பல நான் குண்டாக இருக்கிறேன் என்றும் கமெண்ட் செய்தனர் இது எனக்கு வருத்தமாக இருந்தது என்றும் கூறினார். இதற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடப் போகிறேன் என்று கூறியிருந்தார்.இச்செய்தி பார்த்த பலர், அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News