கிரிக்கெட் வீரரை காதலிக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்?
கிரிக்கெட் வீரரை காதலிக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்?
By : Kathir Webdesk
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, இவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு போடா போடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே படிப்படியாக பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து படம் நடித்து வந்தார். நடிகர் விஷால், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் வரலட்சுமி நடித்துள்ளார். ஏற்கெனவே நடிகர் விஷாலை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதனிடையே நடிகர் சங்கதேர்தலின்போது சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. இதனால் வரலட்சுமியின் காதல் அப்போதிலிருந்து பிரிய ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. யார் அவர் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை, விரைவில் அது பற்றிய முறையான தகவல்கள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. இத்தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.