Begin typing your search above and press return to search.
விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்.!
சென்னை, மாமல்லபுரம் அருகே விபத்தை ஏற்படுத்திய யாஷிகா ஓட்டுநர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

By :
சென்னை, மாமல்லபுரம் அருகே விபத்தை ஏற்படுத்திய யாஷிகா ஓட்டுநர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நடிகையும் பிக் பாஸ் பிரபலமானவருமான யாஷிகா கடந்த 24ம் தேதி தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மாமல்லபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது மட்டுமன்றி யாஷிகா மற்றும் ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story