இயக்குனர் விசுவின் படம் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2-ம் பாகம் உற்சாகத்தில் ரசிகர்கள்..!
இயக்குனர் விசுவின் படம் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2-ம் பாகம் உற்சாகத்தில் ரசிகர்கள்..!
By : Amritha J
தமிழ் சினிமாவில் 80,90களில் புகழ்பெற்ற இயக்குனர் விசு. இவர் எடுக்கும் படங்கள் குடும்ப கதையாகவும், பார்ப்போரை யோசிக்க வைக்கவும், ரசிக்க வைக்கவும் செய்தது. அதில் 1986ஆம் ஆண்டு 'சம்சாரம் அது மின்சாரம்' என்ற படத்தினை இயக்கி ரசிகர்களால் 100 நாட்களுக்கு மேல் பார்க்கப்பட்டது. மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தில் விசு, கமலா காமேஷ், லட்சுமி, ரகுவரன், சந்திரசேகர் போன்றவர்கள் நடித்துள்ளனர். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. இப்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் தொடர்ச்சியைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த விசுவின் சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் கடைசி படமாகும்.
இப்படத்தை சம்சாரம் அது மின்சாரம் 2 என்று விசுவின் திரைக்கதை வசனங்களை, மையப்படுத்தி, மேதாவி எங்கள் பாட்டன் சொத்து என்ற படத்தை தயாரித்த மக்கள் அரசன் பிக்சர்ஸ் திரு.ராஜா தயாரிக்கிறார். மேலும் விசுவின் உதவியாளர் பாக்கிய ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை பரத்வாஜ், விசுவின் மகள் லாவண்யா மற்றும் குழுவினரின் கூடுதல் வசனங்கள், ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு ராஜ்கிரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதை அறிந்த ரசிகர்களும் நெட்டிசன்களும் இது மாதிரியான படங்கள் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என்று கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.