பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சேரன்
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனரான சேரன் மீண்டும் கதாநாயகன் ஆகிறார்.
By : Karthiga
தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டராகவும் கதாநாயகனாகவும் வலம் வந்த சேரன், சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் 'தமிழ் குடிமகன் ' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டர் செய்துள்ளார். இதில் லால் எஸ். ஏ. சந்திரசேகர், ஸ்ரீ பிரியங்கா, ரவிமரியா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லட்சுமி கிரியேஷன் தயாரித்துள்ளது. சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை படத்தில் காட்டி இருக்கிறோம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். படம் நிகழ்ச்சியில் சேரன் பேசும் போது, "அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய நல்ல விஷயங்களை இந்த திரைப்படத்தில் சொல்லியிருக்கிறோம் "என்றார்.
டைரக்டர் தங்கர்பச்சான் பேசும்போது, "சாதிய பாகுபாடுகள் தற்போது ஊரில் இல்லை என்று சொல்ல முடியாது. அதற்கு உயிர் கொடுப்பவர்கள் அதிகாரத்தை பெற விரும்புகிறார்கள். திரைப்படங்கள் பிரிவினையை உண்டு பண்ணாமல் சமூகத்தை இணைக்க வேண்டும் .நானும் சேரனும் சினிமா மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து விட முடியுமா என்று போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
SOURCE :DAILY THANTHI