Kathir News
Begin typing your search above and press return to search.

'அஜீத் 61' - ரீலிஸ் பற்றி போனிகபூர் குடுத்த பக்காவான அப்டேட்

போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் வெளியீடு எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் 61 - ரீலிஸ் பற்றி போனிகபூர் குடுத்த பக்காவான அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  19 May 2022 5:48 AM GMT

போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் வெளியீடு எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.



நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் அஜித்தின் 61'வது திரைப்படமாகும். கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.




இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், 'இந்த படத்தில் அஜீத் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அவரது புதிய தோற்றம் ரசிகர்களால் கண்டிப்பாக விரும்பப்படும். 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் படம் முடிவடையும். இந்த ஆண்டு தீபாவளிக்கு நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்' என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News