சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்!

தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. பல நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், வலிமை படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. ஆனால் அஜித் ரசிகர்கள் இப்படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரிடமும் படம் ரிலீஸ் தேதி, ட்ரெய்லர் குறித்து அப்டேட் கேட்டும் பதிலளிக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உலகில் பிரபலமான ஊடகமான 'போர்ப்ஸ்' என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள போனிகபூர் படத்தின் உள்நாட்டு படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் இன்னும் ஒரே ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டுமே வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்ற செய்தி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரிடம் வலிமை அப்டேட் கேட்டு வரும் அஜித் ரசிகர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் வலிமை அப்டேட்டை கேட்கத் தொடங்கிவிட்டனர். அந்தவகையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் வேண்டும் என்ற போஸ்டரை கையில் பிடித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இவ்வளவு ஆர்வமாக இருப்பதை பார்த்து படக்குழுவினர் வலிமை குறித்து ஏதேனும் தகவலை வெளியிடுவார்களா என்று பார்ப்போம்.
Today match la Namba pullainga #INDvsENG_2021 @thisisysr@BoneyKapoor #Chepauk #Valimai#ThalaAjith #ValimaiWrapOnFeb15 #ValimaiIntroSong pic.twitter.com/elhGmpRjYT
— Surya (@Surya75567388) February 13, 2021