'அஜித் கேட்க மாட்டேன் என்கிறார்' - குமுறும் ஆர்.கே.செல்வமணி
நடிகர் அஜித் தனது படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடத்துகிறார் எனவும் இந்த காரணத்தினால் இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இதுபற்றி ஆர்.கே செல்வமணி பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறியதாவது, 'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கட்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என நம்புகிறேன் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மேல் நடப்பது அன்றைய தினம் சென்னையில் எந்த படப்பிடிப்பும் நடக்காது' என்றார்.
மேலும் பேசிய அவர், 'நடிகர் அஜித் தனது படங்களின் படப்பிடிப்பை தொடர்ச்சியாக ஹைதராபாத் மற்றும் பிற மாநிலங்களில் நடத்துவதால் இங்கு உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கிறோம், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூருக்கு இதே வேண்டுகோளை வைக்கிறோம். தற்போது சென்னையில் அனைத்து வசதிகளும் தேவையான பாதுகாப்பு தயாராக உள்ளது' என்றார்.