எனக்கு ஆபரேசன்.. நடிகர் அமிதாப்பச்சன் ட்வீட்.!
இந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன். இவர் இந்தி சினிமாவில் மாஸ் ஹூரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர். தற்போது அவருக்கு 78 வயதாகும் நிலையில், பல்வேறு வகையிலான பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார்.
By : Thangavelu
இந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன். இவர் இந்தி சினிமாவில் மாஸ் ஹூரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர். தற்போது அவருக்கு 78 வயதாகும் நிலையில், பல்வேறு வகையிலான பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த 1982-ம் ஆண்டு கூலி திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அமிதாப் படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வரை அந்த பாதிப்பு இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமிதாப் ஒரு பேட்டி ஒன்றில், தனது உள்ளுறுப்புகள் 25 சதவீதம் அளவிற்கு மட்டுமே செயல்படுகிறது என்று பரபரப்பான தகவலை கூறியிருந்தார்.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தார்.
இந்நிலையில், அமிதாப்பட்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 'மருத்துவ சூழ்நிலையால் அறுவை சிகிச்சை' இதற்கு மேல் விவரிக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும், எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடவில்லை.